எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
200 மில்லியன் ரூபா செலவில் இது அமைக்கப்படுகிறது. 5 மாடிகளைக் கொண்டதான இந்தக் கட்டிடத்தின் முதல் தொகுதி, ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வோர்ட் தொகுதிகளுக்கான 3 மாடிக் கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். (சே)






