நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றையும், ஐனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள், கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என 10 பேருக்கு, பிரதிகளையும் அனுப்பி வைத்துள்ளார். (சி)

Previous articleகிளிநொச்சி வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடு : மக்கள் கடும் விசனம்
Next articleஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு