வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், அந்த நாட்டின் பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்ஹாரா மாகாண ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அங்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலின் தொடர்ச்சியாக, பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,
அந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர் என அம்மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, எத்தியோப்பிய இராணுவ தலைமைத் தளபதி சியாரே மெகோனெனும், அந்த நாட்டின் அம்ஹாரா மாகாண ஆளுநர் அம்பாச்யூ மெகோனெனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அம்ஹாரா மாகாண அரசைக் கவிழ்க்கவும், அதன் தொடர்ச்சியாக எத்தியோப்பிய அரசைக் கவிழ்க்கவும் அசாமிநியூ சிகே தலைமையிலான ஆயுதக் குழு இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. (நி)








