வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக 10 பேரை பொது இடத்தில் வைத்து சோமாலியா பயங்கரவாதிகள் தூக்கிலிட்டு கொலை செய்தனர்.
சோமாலியா நாட்டைச் சேர்ந்த ‘அல் ஷாபாப்’ இயக்கத்தின் பயங்கரவாதிகள், கடந்த வாரம் 10 பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டு கொலை செய்ததாக பிரான்ஸ் நாட்டு வானொலி தெரிவித்துள்ளது.
இவர்கள் 10 பேரும் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக பயங்கரவாதிகள் சந்தேகப்பட்டு குற்றம் சாட்டினர். 5 பேர், கென்யா, சோமாலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 4ம் திகதி கொல்லப்பட்டனர். மற்ற 5 பேரும் மறுநாள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வானொலி தெரிவித்தது.
சோமாலியாவின் தென்பகுதியில், மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடத்தில் இந்த கொலைகள் நடந்ததாக கூறியுள்ளது.(சே)









