உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை நிகழ்வும் மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இயற்கையினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் தேசிய நிகழ்வாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு அமைய நிலையான வாழ்வுக்கு நிலையான சூழலை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கிராம சேவையாளர் பிரிவில் மரம் நடுகை நிகழ்வும் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சமூக பொலிஸ் குழுவின் தலைவரும் ,மாநகர சபை உறுப்பினருமான இஸ்டீபன் ராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு சமூக தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு சமூக பொலிஸ் குழு
உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். (நி)