சர்வதேச சுற்றாடல் தினம் மற்றும் சர்வதேச கடல் சூழல் தினத்தினை முன்னிட்டு நாட்டின் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.

கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் மற்றும் கிழக்கு சுற்றுலா துறை விடுதிகள் உரிமையாளர் சங்கமும் இணைந்து பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மரநடுகை வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட கடல் சூழல் அதிகார சபையின் அதிகாரி தி.தயாபரன், இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையின் கனிஷ்ட முகாமையாளர் எம்.எச்.எம். மாஹிர் மற்றும் கிழக்கு சுற்றுலா விடுதி உரிமையாளர் சங்க தலைவர் ரொஷான் செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Previous articleபாசிக்குடாவில் மருத்துவ மூலிகை மரங்கள் நாட்டும் நிகழ்வு
Next articleபிக்குமாரும் சிங்கள மக்களும் இணைந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆர்ப்பாட்டம்.