உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ளன.
12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெறவுள்ள போட்டியில், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதவுள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை இடம்பெற்ற உலக கிண்ண போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து 6 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இலங்கை அணி 2 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கை நேரப்படி போட்டிகள் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மா)