2019ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது.
இந்த தொடரை நடத்துகின்ற இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்க அணியும் முதல்போட்டியில் மோதுகின்றன.
அதன்படி , நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 6 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்த இரண்டு அணிகளுமே இதுவரையில் உலகக்கிண்ணத்தை வெல்லவில்லை என்பதோடு, இந்தமுறை உலகக்கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளாக இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பார்க்கப்படுகின்றன.
ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 1ம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 3ம் இடத்திலும் உள்ளன.
இரண்டு அணிகளும் இறுதியாக விளையாடிய ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி பலத்தை நிரூபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.