விருசக்தி பெண்கள் அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டை புகையிரத முன்றலில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இந்த ஆர்பாட்டமானதுயுத்தத்தின் போது இறந்த இராணுவ வீரர்களின் மனைவிமார்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது

இராணுவ வீரர்களின் மனைவிமார்களுக்கு வழங்கப்பட்டுவரும் சம்பளத்தில் 25 விகிதம் முன் அறிவிப்பின்றி அரசினால் குறைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்பு தெரிவிக்கும் முகமாக இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது

இந்த 25 சதவீதமானது 2007ம் வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிமார்களுக்கு வழக்கப்பட்ட சம்பளத்தில் இருந்து குறைக்கப்பட்டதாகவும் , 2007ம் வருடத்தின் பின்னர் உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிமார்களுக்கு ஏற்கனவே குறைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இது தொடர்பாக தங்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றியே குறைத்துள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளத்தை கொண்டு தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் காணப்பட்டதோடு இப்போது 25 சதவீதம் குறைக்கப்பட்டது தங்களுடைய வாழ்கையை பெரிதும் பாதிப்பதாகவும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிமார்கள் தெரிவித்துள்ளனர்

ஜனாதிபதியோ அல்லது உரிய அதிகாரிகலோ இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கப்படாவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரததில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.(சே)

 

Previous articleஉயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 26 கோடி 50 இலட்சம் ரூபா இழப்பீடு.
Next articleமொனராகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்தது.