ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்க அரச புலனாய்வு பிரிவின் முக்கிய 5 அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு, எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ளது.
இதன் போது, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன, குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவீரத்ன, புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் விசாரணை பணிப்பாளர் வருண ஜெயசுந்தர மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரன ஆகியோர் வரவழைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு சாட்சி வழங்கத் தயாராகி வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.(சே)








