கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இன்று விஜயம்செய்த கலபொட அத்த ஞானசாரதேரர் மிகக்குறுகிய காலத்திற்குள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் சுழற்ச்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டமாக மாற்றமடைந்துள்ளது.
ஞானசாரதேரரின் வாக்குறுதியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் நீர் அருந்தி உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்தனர்.
எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தை சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டமாக முன்னெடுக்கவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளர்.
இதற்கு அமைய கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக மாற்றப்படும் வரையில் சுழற்ச்சி முறையிலான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஞானசார தேரர் கூறியதுபோன்று குறுகிய காலப் பகுதியினுள் எமது கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும் என்றும், அவ்வாறு செய்ய முடியாது என்று கூறப்பட்டால் மறு கணம் நான் நஞ்சருந்தி உயிரிழப்பேன் என கல்முனை சுபத்திரா விகாரை விகாராதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.








