இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உட்பட 24 குற்றச்சாட்டுக்கள், ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திசாநாயக்க ஆகியோரிடம் குற்றப் பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில், அவர்களுக்கு எதிராக, கடந்த 20 ஆம் திகதி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதன் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜனாகி ராஜரத்தின ஆகியோர், ஐ.கே.மஹாநாம மற்றும் பீ.திசாநாயக்க இருவருக்கு எதிராகவும், குற்றப் பத்திரிக்கையை கையளித்து, 5 இலட்சம் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் சரீரப்பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு, கந்தளாய் சீனித் தொழிற்சாலையை, இந்தியன் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, 54 மில்லியன் ரூபாவை வழங்கக் கோரி, 20 மில்லியனை முற்பணமாக இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால், ஐ.கே.மஹாநாம மற்றும் பீ.திசாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)