2015ஆம் ஆண்டிற்கு பின்னர் பெறப்பட்ட கடன்கள் 70 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பெற்றிருந்த வெளிநாட்டு கடனில் 70 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய அவர் திருப்பி செலுத்தப்பட்ட இந்த தொகை 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் என சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு போதுமான நிதியை தம்மால் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் இதேபோன்று மேலும் பெரும் தொகையை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

எதிர்வரும் வாரங்களில் இவற்றை செலுத்தக்கூடியதாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டதுடன் அடுத்த வார நடுப்பகுதியில் இத்தொகை செலுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையிடம் தற்போது 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய இருப்பு உள்ளதாக தெரிவித்த அவர், நாட்டின் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக இவை அமைந்துள்ளதாகவும் தற்போது நாட்டில் கடனுக்கான வட்டிவீதம் குறைந்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார். (நி)

Previous articleதங்க ஆபரணங்களை திருடியவர் கைது!
Next articleநாட்டின் கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசும்!