அரச வங்கிகளின் ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணத்திலும் வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள, இலங்கை வங்கி மேற்தரக் கிளை வாசலில், இன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, ஓய்வூதியர்களுக்கான கொடும்பாவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதுடன், உடனடித் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். (சி)