இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலானது முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி,இன்று நடைபெறவுள்ளது.
ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று பகல் இரவு போட்டியாக இடம்பெறும்.
இன்றைய போட்டி இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.
இன்றுடம் தாம் ஓய்வு பெறவுள்ள நிலையில், கிரிக்கட் ரசிகர்கள் அனைவரையும் இன்றைய போட்டியை பார்வையிட மைதானத்துக்கு வருமாறு மலிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும் இன்றைய போட்டிக்கான அனுமதி சீட்டுகள் அனைத்தும் நேற்று முன்தினமே விற்றுத் தீர்ந்துவிட்டதாக சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.(சே)