இலங்கை தபால் திணைக்களத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நாளை முதல் 32 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் 32 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி நாளை மாலை 4 மணி முதல் 14 ஆம் திகதி செவ்வாய் நள்ளிரவு 12 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சாந்தகுமார மீகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்வி கூட்டுறவு பொது ஊழியர் சங்கம், தமக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் எதிர்காலத்தில் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனக் கல்வி கூட்டுறவு பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் நந்தன ஹேவகே தெரிவித்துள்ளார்.

Previous articleஉலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய தாக்கம் ஏற்படும் நிலை!
Next articleபுதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here