இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கில், இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெஹன்ஜி ஹரதா ஆகியோர் இந்த பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான விடயத்தை குறித்த ஒப்பந்தம் மேலும் பலப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (நி)













