அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மகாநாயக தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு, தற்போது கண்டியில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட, தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகல் உள்ளிட்ட பலதரப்பட்ட விடையங்கள் தொடர்பில், இன்றைய சந்திப்பின் போது மகாநாயக தேரர்களுக்கு விளக்கமளிக்கப்படுகின்றது.

அதேவேளை, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாகப் பதவி விலகியமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், குற்றம் சுமத்தப்படாத பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறும், மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமுச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப கட்டணம் அதிகரிப்பு !
Next articleபாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் அசாத் சாலி