பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அந்நாட்டின் எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றுள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் சரியாக நாட்டை வழிநடத்தவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சுமத்திவருகின்றனர்.

இதையடுத்து சரிவு நிலையிலுள்ள பொருளாதாரத்தை மீட்பதில் இம்ரான் கான் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றுள்ளனர் .

பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப்பேரணியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி அடைந்த தினத்தை கருப்பு தினமாகவும் அவர்கள் அனுசரித்தனர்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் இராணுவம் உதவியதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleஅரசியலமைப்புக் குறித்துப் பேசிப் பலனில்லை-மஹிந்த
Next articleதமிழர்களிடையே ஒற்றுமை தேவை : கோடீஸ்வரன் எம்.பி