வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய நாளின் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டடுள்ள இன்றைய நாளின் வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 55 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வரை காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இதனடிப்டையில், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (நி)

 

Previous articleகிளிநொச்சியில் விபத்து:இருவர் உயிரிழப்பு! (காணொளி இணைப்பு)
Next articleகதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை! (படங்கள் இணைப்பு)