கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபையை ஓர் இரவில் மாநகரசபையாக தரமுயர்த்த முடியுமாக இருந்தால் 35 வருடங்களாக உப பிரதேச செயலகமாக உள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை ஏன் பிரதேச செயலகமாக தரமுயர்த்த முடியாது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். (நி)







