சந்திரகிரகணம் நாளை பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது. 17ஆம் திகதி அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவுபெறவுள்ளது.

இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இவ்வாறு சந்திர கிரகணம் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleசஜித் ஐ.தே.க.வை இழிவுபடுத்துகின்றார்-பொன்சேகா
Next articleபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்!!!