நா
ட்டில் புதிதாக ஆறு இலட்சம் பேரை சமுர்த்தித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தினால் விசேட திட்ட முன்னெடுக்கப்பட்டபோதிலும் பிரதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பயனாளிகள் தெரிவின்போது தாம் புறக்கணிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு- ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
சமுர்த்தி உரிமைப்பத்திரம் வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களையும் சமுர்த்தித்திட்டத்தில் இணைக்குமாறுகோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆறுமுகத்தான்குடியிருப்பு சமுர்த்தி அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திநின்று கோஷமெழுப்பினர். (சே)









