ஆப்கானிஸ்தானில் நோன்பு பெருநாள் தொழுகையின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானதுடன் 14 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நஹ்ரெயின் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாக்லான் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.