ஆப்கானிஸ்தான் நாட்டில் 3 இடங்களில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சில இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் தற்கொலைப் படையினரின் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு ஒன்றை கட்டிக் கொண்டு பைக்கில் வந்த பயங்கரவாதி பேருந்து ஒன்றின் மீது மோதி அதனை வெடிக்க செய்துள்ளார் . அனைத்து தொடர்ந்துமேலும் இரண்டு வெடிகுண்டு தாக்குதல்இடம்பெற்றுள்ளன .
இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் . பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது ..காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என அந்நாட்டு உள்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.(சே)