மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி பங்கை சேர்ந்த அருட்சகோதரி மேரி தயா மோசேஸ் கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து அருட்சகோதரியாக திருநிலைப்படுத்தப்பட்டு ஆன்மீக பணியில் 25 வருடங்களை தமது சேவையினை ஆற்றிவருகின்ற அருட்சகோதரியின் 25 வருட நிறைவினை சிறப்பிக்கும் விசேட திருப்பலியும், அவரது ஆன்மீக பணி வாழ்வினையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி, கௌரவிக்கும் நிகழ்வு அமிர்தகழி துய கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் இன்று ஒப்புகொடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு அமிர்தகழி துய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மக்களின் ஏற்பாட்டில் பங்கு தந்தை ஜெ.எ.ஜி. ரெட்ணகுமார் தலைமையில் விசேட திருப்பலியும் ,கௌரவிப்பு நிகழ்வும் இன்று நடைபெற்றது.
திருப்பலியிலும், நிகழ்விலும் பங்கு மக்களும் அருட்சகோதரியின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். (MA)





















