நாட்டு மக்கள் மீது அக்கறை கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சி, அழிவை நோக்கி நகர்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தற்போது நாட்டு மக்களின் மீது எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை, தேவையற்ற விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது, காலம் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் காமினி திஸாநாயக்கவின் கொள்கைகளையும், அவர் நாடு மீது கொண்டு தனித்துவ பற்றினையும், இவருக்கு பிறகு எவரும் முன்னெடுத்து செல்லவில்லை.

முறையற்ற விதத்தில் செயற்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆயுட்காலம் முடிவடைந்து வருகின்றது.

அழிவினை எவரும் ஏற்படுத்தவில்லை, ஐக்கிய தேசிய கட்சியே தேடிக்கொண்டது என்று அஸ்கிரிய பீட மநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளமைக்கு, அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

2015 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் செய்த தவறினை, இன்று நன்கு புரிந்துக் கொண்டுள்ளார்கள்.

மக்கள் மத்தியில் சென்று வாக்கு கோருவதற்கு, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான நடப்பு அரசாங்கத்திற்கு எவ்வித தகைமையும் கிடையாது.

ஆட்சி மாற்றத்தையே இன்று அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்.
என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Previous articleமட்டக்களப்பு  மாவட்ட  பொசன் விழா
Next articleகுண்டுத்தாக்குதலுக்கு பின் அரசியல் தீவிரம்!