அவுஸ்திரேலியாவில் அனைத்துலக சிலப்பதிகார மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழின் முதற்காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரத்திற்கு அனைத்துலக நிலையில் முதலாவது சிலப்பதிகார மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

சிலப்பதிகார மாநாடு செப்ரெம்பர் மாதம் 27,28,29 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் இடம்பெறவுள்ளது.

விழாவில் சமர்ப்பிக்கப்படுவதற்காகவும் விழா மலருக்காகவும் சிலப்பதிகாரம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளை துறைசார்ந்தவர்களிடமிருந்தும் மற்றும் ஆர்வலர்களிடமிருந்தும் மாநாட்டுக் குழுவினர் வேண்டியுள்ளனர்.

ஆய்வு நோக்கில் சிலப்பதிகாரத்தை மையமிட்டுக் கட்டுரைகள் எழுதப்படல் வேண்டும் எனவும் தமிழிசைக்குச் சிலப்பதிகாரம் ஆற்றிய பங்குகள், சிலப்பதிகாரம் கூறும் நீதிகள், சிலம்பு காட்டும் தமிழரின் தொன்மை முதலிய விடயப் பொருள்களில் கட்டுரைகள் அமையலாம் எனவும் ஏ 4 தாளில் 5 பக்கங்களுக்கு அதிகரிக்காது யுனிகோட் எழுத்துருவில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என மாநாட்டுக் குழுத் தலைவர் கலாநிதி இ.மகேந்திரன் அறிவித்துள்ளார்.  (நி)

Previous articleஅமெரிக்காவில் நிலநடுக்கம்!
Next articleசனத்தொகை வீதத்தை சமநிலையில் பேணவேண்டும்:எஸ்.பி.திஸ்ஸாநாயக்க