சஹ்ரான் எனும் ஒருவர் செய்த செயலுக்காக, முஸ்லிம் இளைஞர்கள் பலர், இன்று தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நஷீர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்.

அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்துகின்ற விடயத்திற்கு அப்பால் சென்றுசெயற்படுகின்றார்கள்.

கல்முனையில் உண்ணாவிரதம், கண்டியிலே உண்ணாவிரதம் நாட்டில் எங்கும் உண்ணாவிரதம் நடக்கின்றது அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது இப்படி அனைத்து இடங்களிலும் உண்ணாவிரதம் நடக்கிறது, பின் எதற்கு இந்த அவசரகால சட்டம்.

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினர் சிலர் எல்லைமீறி செயற்படுகின்ற நிலை காணப்படுகின்றது. வீதியில் நிற்கும் ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை தேவையில்லாமல் அடிக்கும் நிலை காணப்படுகின்றது.

சஹ்ரான் எனும் ஒருவர் செய்த செயலுக்காக முஸ்லிம் இளைஞர்கள் பலர் காலவரையற்று தடுத்து வைத்துள்ளார்கள். அரசாங்கத்தின் பக்கபலமாக நாம் இருக்கின்ற போது, இவ்வாறான செயற்பாடுகளை தட்டிக் கேட்பதில்லையா என்று பலர் கேட்கின்றார்கள். என குறிப்பிட்டார். (சி)

Previous articleஇராணவ முகாம்கள் இருக்க சிலைகள் காணமல் போவது எப்படி : சுரேஷ்
Next articleதென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா இலங்கை விஜயம்