மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதற்காக கொண்டுவரவில்லை.
அவர்களின் பாவத்தினை கழுவதற்காகவே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வந்தார்கள்.
நாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்த போது, அரசாங்கத்தினை துரத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் கொண்டு வந்தோம், ஆனால் அது நிறைவேறவில்லை.
அதற்கு காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கவில்லை, தமிழ் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியிருந்தோம்.
இவர்கள் யாருடன் பேச்சுக்களை நடாத்தி இதனைக் கொண்டு வந்தார்கள் என்பது எமக்கு தெரியாது.
இதனை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்தது அரசாங்கத்தினை சக்தி உள்ளதாக காட்டுவதற்காக.
119 வாக்குகளைப் பெற்று, அரசாங்கத்திற்கு வலுவைச் சேர்த்திருக்கின்றது மக்கள் விடுதலை முன்னணி.
அரசாங்கத்தினை வலுவாக்க, மக்கள் விடுதலை முன்னணி போட்ட திட்டமே, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை.
என குறிப்பிட்டுள்ளார். (சி)






