மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளதாகவும் மேலும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது தேர்தலை பிற்போட தயாராவதாகவும் தெரிவித்த அவர், தயவு செய்து தேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.(சே)

Previous articleவாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
Next articleமும்பை தாக்குதலின் சூத்திரதாரி ஹபீஸ் சயீத் கைது!!