அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும், ஆதரவாக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம், இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்பில், பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும், ஆதரவாக 92 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று, பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனக்கோரி, மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.