அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 112 வருடகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது.
அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளதுடன் 112 வருடகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது.
அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, அயர்லாந்து அணியை 38 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 23.4 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 85 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 58.2 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்ஸில் 303 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குகளையும் இழந்து.
182 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 15.4 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 38 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 143 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் குறைவான ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்ற ஐந்தாவது அணி என்ற பெருமையை பெற்றுள்ளதுடன் 112 வருடகால கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது.
இந்த தோல்வியின் மூலம் அயர்லாந்து அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் ஆட்டமிழந்த அணிகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. (நி)







