பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் தம்பிலுவில் உள்ள பிரதான வீதியில் பொது மக்களுக்கான தாகசாந்தி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த தாகசாந்தி நிகழ்வானது, கடந்த ஏப்ரல் 21 குண்டுவெடிப்பில் உயிர் இழந்த உறவுகளின் ஆத்ம சாந்தியடைய வேண்டி அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொசன் தினமான இன்று  வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைப்பின் நிருவாகிகள் ,

அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கமானது தமிழ்,சிங்கள, முஸ்லிம் இன பேதங்கள் இன்றி தொடர்ந்து இவ்வாறான சமூகப் பணிகளை முன்னெடுக்கவுளோம்.

நாம் எமது காணாமல் போன உறவுகளின் குடுமபங்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் நிலையில் எமது அமைப்பு இவ்வாறான சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், காணாமல் போன உறவுகளுக்கும் புண்ணியம் கிடைக்கும் என நம்புவதாகவும் அமைப்பின் தலைவர் என்.நிசங்ஹாமி தெரிவித்திருந்தார்.(சி)

 

 

Previous articleஎது சரி எது பிழை
Next articleயாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !