அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில், குறிப்பாக பொத்துவில் தொடக்கம் நீலாவணை வரை கடல் கொந்தளிப்பும் ஐம்பது மைல் வேகத்தில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஆழ் கடல் மீனவர்களும் கரைவலை மீனவர்களும் தங்களின் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
கடல் கொந்தளிப்பு காரணமாக சுமார் 390 ஆழ் கடல் வள்ளங்ளும் வெளி இணைப்பு இயந்திரப் படகுகளும் இயந்திரத் தோணிகள் என்பன, அசாதாரண சூழ்நிலை காரணமாக கடலுக்குள் செல்ல முடியாமல் கரையிலும் மீனவர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள வாடிகளில் அமர்ந்திருப்பதையும் உறங்குவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாது உள்ளனர்.
மீன் பிடி துறைமுகத்தின் அவசியம் பற்றி பிரதேச மீனவர்கள் தெரிவிப்பதுடன் இவ்வாறான சூழ்நிலையில் பல இலட்சங்கள் பெறுமதியான இயந்திரப்படகுகளை அனர்த்தங்களிலிருந்து காப்பாற்ற முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். (சி)








