அம்பாறையில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில், இன்று சில மணிநேரங்கள் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது.
அம்பாறையில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்திருந்த நிலையில், இன்று சில மணிநேரங்கள் பெய்த மழையால், வெப்பமான காலநிலை தணிந்துள்ளது.
நாட்டில் மழைவீழ்ச்சி குறைந்து காணப்பட்டதுடன் வெப்பத்தின் அளவும் அண்மை காலமாக அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இன்று
கடும் மழை இடி மின்னலுடன் சில மணிநேரங்கள் தொடர்ந்து பெய்தது.
சில மணிநேரங்கள் தொடர்ந்த மழையால், வறட்சியால் பாதிப்புற்ற விவசாயிகளும் மகிழ்சியடைந்தனர்.
குறிப்பாக பெரியநீலாவணை, மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனை, காரைதீவு, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அம்பாறை நக பகுதிகளில் மழை அதிகளவாக பெய்ததது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நேற்று பிற்பகல்வேளைக்கு பின்னர் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக,வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)







