யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் அம்பன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பப்பட்டுள்ளனர்.
அம்பன் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் வீதிக்கு குறுக்காக திரும்ப முற்பட்டபோது, பருத்தித்துறை பகுதியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (நி)










