அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கீழ் இயங்கும் பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சானது, பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பி. ஹரிசன் கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சானது, கிராமியப் பொருளாதார நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி அமைச்சகத்தில் இன்று காலை இரு அமைச்சர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்து கொண்டார்.