” அமைச்சுப் பதவியை ரிஷாட் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – என்று அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டாக பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21/4 தாக்குதலையடுத்து கடும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட ரிஷாட் பதியுதீனும் பதவியேற்பார் என முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டார்.

இந்நிலையிலேயே அத்துரலிய ரத்தன தேரர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர் பதவிகளை வகித்த ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகிய மூவரும் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி ரத்தன தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதையடுத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி துறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleபேஸ்புக் நிறுவனத்திற்கு 90 ஆயிரம் கோடி அபராதம்
Next articleஜாப்பானில் பாரிய நிலநடுக்கம்