அமெரிக்காவில் வீசிவரும் அனல் காற்று காரணமாக இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளை அண்மித்த பகுதிகளில் அனல் காற்று வீசி வருகின்றது.

இதன்காரணமாக சுமார் 200 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனல் காற்று வீசிவரும் பகுதியிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையற்ற விதத்தில் வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகம் நீரை அருந்துமாறும், வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக நீர் நிலைகளுக்கு செல்லுமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleமனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையினை அவுஸ்ரேலிய அரசு நிராகரித்தது.
Next articleக.பொ.த உயர்தர, தனியார் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!