எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தான் காரணம் என்ற அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது அதனை ஒரு போதும் நாங்கள் ஏற்க மாட்டோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடா பகுதியில் மர்மமான முறையில் நோர்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், ஈரான் அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டினார்.
இதனை மறுத்துள்ள ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தாக்குதலுக்கு அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி அமெரிக்கா, தங்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.(சே)








