149 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற அபூர்வ சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் வெற்றுக் கண்களால் காணக்கூடியதாக இருந்தது.
பொதுவாக பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது வீழ்ந்து சந்திரனை மறைக்கின்றது.
சந்திர கிரகண நிகழ்வின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைத்ததை காணமுடிந்தது.
149 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற அபூர்வமான சந்திர கிரகணத்தை இந்தியாவில் குரு பூர்ணிமா பண்டிகையாக கொண்டாடிவருகின்றனர்.
சில நாடுகளில் இந்த சந்திர கிரகணம் நேற்று இரவு தென்பட்டுள்ளது. (நி)








