விம்பிள்டன் தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவில் அண்டி மரே மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஜோடி விலகியது.
ப்ருனோ சோரெஸ் மற்றும் நிக்கோல் மெலிசார் ஆகிய ஜோடியுடன் நேற்று இடம்பெற்ற நான்காம் சுற்று போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்தனர்.
இதனை அடுத்து அந்த ஜோடி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
அதேநேரம், விம்பிள்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் உலகின் பிரபல வீரர்களான ரொஜர் பெடரர் மற்றும் ரபாயல் நடால் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
காலிறுதி சுற்றில் அவர்கள் இருவரும் சந்தித்த எதிர் போட்டியாளர்களை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
2008ம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியின் பின்னர், அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.