ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்றையதினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர் .
இன்று பிற்பகல் 2 மணிக்கு அதன் பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று கூடுகிறது.
இவர்கள் இருவருக்கு மேலதிகமாக காத்தன்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்கத்தின் தலைவர் உள்ளிட்டவர்களும் இன்று வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தெரிவுக் குழு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த தெரிவுக் குழுவை ரத்து செய்யுமாறும், அதில் பணியில் உள்ள அதிகாரிகள் யாரும் முன்னிலையாக அனுமதிக்கப்போவதில்லை என்றும், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.






