முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 16 பேர் கொண்ட குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக  முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளை தலைமையக கடற்படை வீரர்களும் கிழக்கு கடற்படை தலைமையக கடற்படை வீரர்களும் இணைந்து மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த 16 பேர் கொண்ட குழுவினர் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நேரம் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 வெளியிணைப்பு இயந்திரங்களுடனான  3 படகுகள் மற்றும் 3 டெட்டனேட்டர்கள் மற்றும் 384 கிலோகிராம் பிடிபட்ட மீனும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மைய நாட்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகின்ற நிலையில் குறித்த கைது நடவடிக்கையானது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ம)

Previous articleசிங்கள மொழி பயிற்சியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள்
Next articleதேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில்லை – பூஜித தெரிவிப்பு