நீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்பட்ட மட்டக்களப்பு பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

29.6 மில்லியன் ரூபா செலவில் இப்பாலத்தினை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில், விவசாய அமைச்சர் கி.கரிசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், தமிழரசு கட்ச்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் ஏ.ரி.அமிஸ்டிம் மற்றும் நீர்பாசன திணைக்கள உயர் அதிகாரிகள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.(சி)

Previous articleவிரைவில் மாகாண சபைத் தேர்தல் – வஜிர அபேவர்த்தன
Next articleபிறந்தவுடனே அடையாள அட்டை இலக்கம்