திருகோணமலை மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரை மீண்டும் நியமித்துத் தருமாறு வலியுறுத்தி, இன்று காலை பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை ஈச்சிலம்பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட மாவடிச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரை மீண்டும் நியமித்துத் தருமாறு வலியுறுத்தி இன்று காலை பாடசாலைக்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையின் அதிபராக இருந்தவர் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி ஈச்சிலம்பற்று கல்வி கோட்டத்திற்குட்பட்ட சிறி செண்பகவல்லி மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டார்.
இந்நிலையிலேயே அவரை மீண்டும் நியமித்து தருமாறு ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டது.
இப் பாடசலையின் பிரதி அதிபர் தற்போது அதிபராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திற்குச் சென்ற ஈச்சிலம்பற்று கோட்டப் பணிப்பாளர் அருள்நேசராசா ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கலந்துரையாடியபோது பாடசாலையின் அதிபர் தனது சுயவிருப்பின் பேரிலே இடமாற்றம் பெற்றுச் சென்றதாகவும், கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய விண்ணப்பங்கள் கோரப்பட்டு இப் பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டார். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.(மா)

Previous articleவயிற்றோட்டம் காரணமாக ஆண் குழந்தை உயிரிழப்பு
Next articleசாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கல்